பிரதமர் மோடியின் 'மிஷன் சக்தி' உரையில் தேர்தல் நடத்தை விதிமீறலா?

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், இது தேர்தல் நடத்தை விதிகளுக்குள் வராது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: March 28, 2019, 8:25 AM IST
பிரதமர் மோடியின் 'மிஷன் சக்தி' உரையில் தேர்தல் நடத்தை விதிமீறலா?
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: March 28, 2019, 8:25 AM IST
மிஷன் சக்தி வெற்றி குறித்த பிரதமர் மோடியின் உரையில் தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், விண்வெளியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சாதனை மூலம் எலைட் சூப்பர் கிளப் எனப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் 4-வதாக இந்தியா இடம் பெற்றிருப்பதாக பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில் விஞ்ஞானிகள் சாதனைகளை வைத்து, பிரதமர் மோடி தேர்தல் ஆதாயம் தேடக் கூடாது என விமர்சித்த எதிர்க்கட்சிகள், தேர்தல் விதிமீறல் என்று கூறி தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன.

இதையடுத்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் உரை குறித்து ஆராய துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவினர் பிரதமர் மோடியின் உரையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், இது தேர்தல் நடத்தை விதிகளுக்குள் வராது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also see... நீண்ட இழுபறிக்குப் பின் தமிழிசையின் வேட்புமனு ஏற்பு! 
First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...