LIVE | மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் - அக். 24-ல் வாக்கு எண்ணிக்கை

அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

LIVE | மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் - அக். 24-ல் வாக்கு எண்ணிக்கை
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: September 27, 2019, 9:18 AM IST
  • Share this:
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியும், ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியும் முடிவடைகிறது.

மஹாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.


அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அக்டோபர் 4-ம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

மஹாராஷ்டிராவில் தற்போது ஆளும் பாஜக + சிவசேனா கூட்டணி மீண்டும் அதே கூட்டணியுடன் களமிறங்குகிறது. காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து களமிறங்குகிறது.

ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி மோதல் உள்ளது.நாடுமுழுவதும் காலியாக உள்ள 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LIVE VIDEO:
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்