ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

Gujarat elections - குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று நண்பகல் அறிவிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

  இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நேரடியாக தீவிர போட்டி இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், டெல்லியில் முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து தீவிரப்படுத்தி வருகிறது.எனவே, இம்முறை குஜராத்தில் தேர்தல் களம் மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சில வாரங்களுக்கு முன்னர் இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது.68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதன்படி நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

  இதையும் படிங்க: விவசாயிகளுக்கு உர மானியத்தொகை உயர்வு - ரூ.51,875 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை உத்தரவு

  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. குஜராத் தேர்தல் முடிவுகளும் இதே டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவே வாய்ப்புகள் உள்ளன. இமாச்சல் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக பரபப்புரையை முன்னெடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பல்வேறு தொகுதிகளில் ஏற்கனவே பரப்புரையை தொடங்கிவிட்டனர்.

  அதேபோல் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் குஜராத் மாநிலத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பிரியங்கா காந்தியை இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முக்கிய முகமாக முன்னிறுத்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு தென்மாநிலங்களில் தற்போது முகாமிட்டுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Aam Aadmi Party, Assembly Election 2022, Election Commission, Election commission of India, Gujarat, Himachal Pradesh, PM Modi