மட்டன் பிரியாணிக்கு 200 ரூபாய் மட்டுமே செலவு செய்யணும்- தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கான விலை பட்டியல் தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது .

மட்டன் பிரியாணிக்கு 200 ரூபாய் மட்டுமே செலவு செய்யணும்- தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: March 20, 2019, 12:02 PM IST
  • Share this:
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இதேபோல சட்டமன்றத் தொகுதிக்கு 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளக்கூடிய செலவுகளைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மட்டன் பிரியாணி 200 ரூபாய் என்றும் சிக்கன் பிரியாணி 180 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல காலை உணவிற்கு 100 ரூபாய் என்றும் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் என்றும் தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் விலை நிர்ணயப் பட்டியல்:

மட்டன் பிரியாணி - 200 ரூபாய்சிக்கன் பிரியாணி - 180

சிற்றுண்டி - 100

வெஜிடேபிள் பிரியாணி - 100

மதிய உணவு - 100

வெஜிடேபிள் ரைஸ் - 50

குளிர்பானம் (1 லி) - 75

இளநீர் - 40

தண்ணீர் 1 லி - 20

சால்வை - 150

பூ - 60

பூனம் புடவை - 200

டி சர்ட் - 175

தொப்பி - 50

பிளீச்சிங் பவுடர் (1 கி) - 90

பூசணிக்காய் - 120

வாழை மரம் - 700

தொழிலாளர் செலவு - 450

வாகன ஓட்டுநர் - 695

பட்டாசு (1000 வாலா) - 600

டிரம்ஸ் (4 மணி நேரம்) - 4500

திருமண மண்டபம் - 2000 முதல் 6000

விடுதி அறைகள் (ஏசி) - 9300+ வரி (5 * விடுதி)

5800+ வரி (3 * விடுதி)




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: March 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading