ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயார்: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி

ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயார்: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி

சுனில் அரோரா

கடந்த நவம்பரில் பிரதமர் மோடி ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதை பரிந்துரைத்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைப் பிரேரணை செய்தார்.

 • Share this:
  கடந்த நவம்பரில் பிரதமர் மோடி ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதை பரிந்துரைத்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைப் பிரேரணை செய்தார்.

  இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  தெரிவித்துள்ளார்.

  நியூஸ் 18 -க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

  “ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட சட்டச் சீர்த்திருத்தங்களை அடுத்து தேர்தல் ஆணையம் இத்திட்டத்திற்கு தயாராகவே உள்ளது” என்றார்.

  ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை கடந்த நவம்பரில் அறிவித்த பிரதமர் மோடி, ஒரே வாக்காளர் பட்டியலையும் பரிந்துரைத்தார். “நாட்டில் பல இடங்களில் சிலமாதங்களுக்கு ஒரு முறை தேர்தல்கள் வருகின்றன. இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்படைவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் குறித்த ஆழமான ஆய்வும் பரிசீனலையும் அவசியம்” என்று அவர் வலியுறுத்தினார்.

  பல தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது புதிதில்லை என்றாலும் இதற்கு முன்னால் ஆட்சியிலிருந்த தலைவர்களைக் காட்டிலும் பிரதமர் மோடி இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பேசி வருகிறார்.

  2018-ம் ஆண்டு சட்ட ஆணையம் தனது வரைவு அறிக்கையில் ஒரு ஆண்டில் நடக்கவிருக்கும் பல தேர்தல்களை ஒரே தேர்தலாக நடத்த பரிந்துரை செய்தது.

  இந்த ஒருநாடு ஒரு தேர்தல் திட்டத்தை காங்கிரச் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் இதனை ‘செயல்படுத்த முடியாத’ திட்டம் என்று வர்ணித்தது.
  Published by:Muthukumar
  First published: