நாட்டில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியில் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவுசெய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட தகவல்களை சரி பார்க்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.. அப்போது இந்த 111 கட்சிகள் இயங்காமல் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இதில் மூன்று கட்சிகள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்திய தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் மேற்கண்ட 111 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.இந்த சீரமைப்பு நடவடிக்கை கடந்த மே 25ஆம் தேதி தொடங்கியதாகக் கூறிய இந்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியுள்ளது.
மேலும், 66 கட்சிகள் தங்களின் நிதி வரவு குறித்து உரிய ஆவணங்களை காட்டவில்லை என்ற புகாரில் வருவாய் துறைக்கு தேர்தல் ஆணையம் அந்த கட்சிகளின் பட்டியலை அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கட்சிகளுக்கு மாநில அங்கீகாரம், தேசிய அங்கீகாரம் என இரு வகையான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இரு வகையான அங்கீகாரத்தையும் பெற கட்சிகள் முறையே குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் அல்லது எம்பிக்கள் மற்றும் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.இந்த கட்சிகளுக்கு மட்டுமே கோரிக்கையின் படி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும். மற்றவை அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகவே கருதப்படும்.
இதையும் படிங்க: சில முடிவுகள் முதலில் நியாயமற்றதாக தோன்றலாம்..பின்னாளில் தேசத்தை கட்டியெழுப்ப அவை உதவும்: அக்னிபத் குறித்து மோடி பேச்சு
புதிதாக பொறுப்பேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தீவிரமான சீர்திருத்த நடவடிக்கையில் ஆர்வம் கொண்டவர். இதற்கு முன்னர் இவர் நிதித்துறை செயலாளராக இருந்த போது, ஷெல் கம்பெனிகள் எனப்படும் போலி நிறுவனங்களை கண்டறிந்து களையும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியவர். இவரின் நடவடிக்கையின் பேரில் 2017-18 காலகட்டத்தில் சுமார் 2.26 லட்சம் ஷெல் கம்பெனிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief Election Commissioner, Election commission of India, Political party