வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு? தொழில்நுட்ப வல்லுநருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தவறான தகவலை பரப்பியதாக சையது சுஜா மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்துவருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

news18
Updated: January 22, 2019, 8:14 AM IST
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு? தொழில்நுட்ப வல்லுநருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
கோப்புப் படம்
news18
Updated: January 22, 2019, 8:14 AM IST
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறியதற்காக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வுசெய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக அடுத்தடுத்து எழும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், வாக்கு இயந்திரம் தொடர்பாக லண்டனில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள இந்தியரான தொழில்நுட்ப வல்லுநர் சையது சுஜா, ஸ்கைப் மூலம் கருத்துக்களை தெரிவித்தார். அப்போது அவர், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.

இதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி ஏதும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாரத மின்னணு நிறுவனம் மற்றும் இந்திய மின்னணு கழகத்தின் கண்காணிப்பில், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இதன், ஒவ்வொரு நிலையிலும் மிகவும் துல்லியமாக கண்காணித்து வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

தவறான தகவலை பரப்பியதாக சையது சுஜா மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்துவருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தெரிவித்து வருவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.ரஃபேல் விவகாரம், தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி என பொய்களை உரைத்துவரும் காங்கிரஸ் கட்சி, அடுத்த மிகப்பெரும் பொய்யை தெரிவித்துவருவதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Also see...

First published: January 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...