தேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்!

இந்த கூட்டத்தை அசோக் லவாசா புறக்கணிப்பாரா அல்லது அவரிடம் சமரச பேச்சுவார்தை நடத்தி பங்கேற்க வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்!
தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 21, 2019, 7:48 AM IST
  • Share this:
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இதில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசா பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், வாக்கு எண்ணிக்கை குறித்தும், வெளிப்படைத் தன்மையுடன் எந்தவொரு முரண்பாடு இல்லாத வகையில் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.


இதனிடையே, தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர், விதிமுறையை மீறி ராணுவ தாக்குதல் குறித்து பேசி அதரவு திரட்டியதாக காங்கிரஸ் புகார் அளித்தது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டதாக, அதன் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா குற்றம்சாட்டினார்.

அத்துடன், தனது கருத்து ஏற்கப்படாததால் இனி நடைபெறும் தேர்தல் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறியிருந்தார். கருத்து வேறுபாடுக்குப் பின் முதல்முறையாக தேர்தல் ஆணையக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தை அசோக் லவாசா புறக்கணிப்பாரா அல்லது அவரிடம் சமரச பேச்சுவார்தை நடத்தி பங்கேற்க வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா அடங்கிய மூவர் குழுதான் விதிமீறல் தொடர்பான நடவடிக்கை எடுக்கும். ஆனால், பிரதமர் விவகாரத்தில் லவாசா-வின் கருத்து ஏற்கப்படாடததால் அதிருப்தி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையுடன் ஓப்புகை சீட்டும் இந்த முறை எண்ணப்படவுள்ளது. அதன்படி, மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு எண்ணப்படும்

இதனால், வழக்கத்தைவிட கூடுதலாக 6 மணி நேரம் தாமதம் ஆகும் என்பதுடன், ஒப்புகை சீட்டு எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே அந்தந்த தொகுதியின் முடிவு வெளியாகும். எனவே, பெரும்பான்மையான தொகுதிகளில் இரவில் தான் இறுதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், துணைராணுவப் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Also see... கருப்பு சட்டையிலிருந்து சிவப்பு சட்டைக்கு மாறவேண்டிய சுழ்நிலை வந்துள்ளது: யுகபாரதி

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading