மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம்!

மேலும், #LokSabhaElections2019, #IndiaDecides2019, IndiaElections2019 உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை 12 மொழிகளில் அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்ற கட்டத்தின் எமோஜி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

news18
Updated: March 24, 2019, 7:57 AM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம்!
ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம்
news18
Updated: March 24, 2019, 7:57 AM IST
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் துவங்க உள்ள நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில் தேர்தல் ஆணையம் இணைந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் இவ்வளவு நாள் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதன்முறையாக ட்விட்டரில் கடந்த வெள்ளிக்கிழமை கணக்கை துவங்கி உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் இணைந்ததற்கு ட்விட்டர் இந்தியா வாழ்த்துக்களையும், தேர்தலில், இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என்றும் பதில் அளித்துள்ளது.

Loading...
வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், ட்விட்டர் வாயிலாக அவர்களுக்கும், அவர்கள் மூலமாக மக்களுக்கும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேலும், #LokSabhaElections2019, #IndiaDecides2019, IndiaElections2019 உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை 12 மொழிகளில் அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்ற கட்டடத்தின் எமோஜி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

Also See...

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...