எதிர்க்கட்சிகள் ஆளும் ம.பி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஐடி ரெய்டு!

நேர்மையான முறையில் அரசியல் பாகுபாடின்றி அதிகாரிகள் சோதனை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Web Desk | news18
Updated: April 11, 2019, 8:00 AM IST
எதிர்க்கட்சிகள் ஆளும் ம.பி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஐடி ரெய்டு!
கமல்நாத்
Web Desk | news18
Updated: April 11, 2019, 8:00 AM IST
மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு 1000 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக வருமான வரித்துறை  சோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை நடைபெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து பணம் பெற்றது குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், சுமார் 280 கோடி ரூபாய் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களால் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு  சுமார் 1000 கோடி ரூபாய் கமல்நாத் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை குறி வைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி நிதி அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், வருமான வரித்துறை நேர்மையாகவும், நடுநிலையுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் நேரடி வரிவிதிப்பு முகமை தலைவர் பிரமோத் சந்திர மோடி மற்றும் வருவாய்த்துறை செயலர் அஜய்பூஷன் ஆகியோர் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.தேர்தல் ஆணையம் முன்பு ஆஜரான பிரமோத் சந்திர மோடி மற்றும் அஜய் பூஷன் ஆகியோரிடம், நேர்மையான முறையில் அரசியல் பாகுபாடின்றி அதிகாரிகள் சோதனைகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, குஜராத் மாநிலம், ஜுனாகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கூட நிறைவடையவில்லை என்றும், அதற்குள் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகா எப்படி காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம்மாக இருந்ததோ, அதுபோல தற்போது மத்திய பிரதேசம் காங்கிரசின் ஏடிஎம்மாக மாறியுள்ளதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

வருமான வரித்துறை ஒரு சார்பாக சோதனைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தை அழிக்க விரும்புவதாக புகார் கூறியுள்ளார். மேலும் ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து இதுதொடர்பாக புகார் மனு அளித்தார்.

Also see...மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தடை!

Also see... அமேதி தொகுதியை தக்க வைப்பாரா ராகுல் காந்தி?


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...