குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில், பநேஜ் கிர் கிராமத்தில் உள்ள ஒரே ஒரு வாக்காளருக்காக அந்தப் பகுதியில் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி மையம் அமைத்துள்ளது.
குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 89 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பநேஜ் கிராமத்தில் ஒரே ஓரு வாக்காளருக்காக வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பநேஜ் கிராமத்தில் உள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி மகந்த் பாரத் தாஸ் என்பவருக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப் பட்டு வருகிறது. இந்த கோவில் அடர்ந்த காட்டின் நடுவில் உள்ளது. வனவிலங்குகளின் அச்சம் காரணமாக வேட்பாளர்கள் யாரும் இங்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதில்லை.
இதையும் படிங்க: மும்முனைப் போட்டி.. குஜராத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!
கடந்த 2019 ஆம் ஆண்டு மகந்த் பாரத் தாஸ் உயிரிழந்த நிலையில், அவருக்கு மாற்றாக மகந்த் ஹரிதாஸ்ஜி உதாஸின் பூசாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது ஹரிதாஸ்ஜி உதாசினுக்காக இந்த சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர் அடங்கிய குழு 25 கிலோ மீட்டர் பயணித்து இந்த வாக்குச்சாவடியை அமைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assembly Election 2022, Election, Gujarat