ஹோம் /நியூஸ் /இந்தியா /

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் ஆணையம் ஆலோசனை

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் ஆணையம் ஆலோசனை

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்

இடம்பெயர்ந்தவர்களுக்கு ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் அளிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • New Delhi, India

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திங்கள் கிழமை அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.

இது தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகளுக்கும், 57 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இயந்திரங்களின் செயல் விளக்கத்தை அளிக்க உள்ளனர். இது தொடர்பான தங்கள் கருத்துக்களை, இம்மாத இறுதிக்குள் எழுத்துபூர்வமாக அளிக்க கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே வாக்கு செலுத்தும் வசதி ஏற்படும்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை. பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால், ரிமோட் தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் விரைவுப்படுத்தி வருகிறது.

First published:

Tags: Election Commission, Migrants