ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தொகுதி வரையறை! ஆலோசனையை தொடங்கிய தேர்தல் ஆணையம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 114 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெறும் என்றும் விரைவில் அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தொகுதி வரையறை! ஆலோசனையை தொடங்கிய தேர்தல் ஆணையம்
ஜம்மு காஷ்மீர்
  • News18
  • Last Updated: August 13, 2019, 9:28 PM IST
  • Share this:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை தொகுதி எல்லை வரையறை குறித்து தேர்தல் ஆணையம் முதல் கட்ட ஆலோசனையை தொடங்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 114 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெறும் என்றும் விரைவில் அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

இதன்படி, ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தொகுதி எல்லை வரையறை தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை வரையறை இறுதி செய்யப்பட்டதும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...