ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்!

ராஜஸ்தானை பொறுத்தவரை ஆளும் பாஜக-வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு முதல்வர் வேட்பாளரையே அறிவிக்காமல் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

news18
Updated: December 5, 2018, 11:14 PM IST
ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்!
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றோர்
news18
Updated: December 5, 2018, 11:14 PM IST
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நாளை மறுநாள் (டிசம்பர் 7) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்ந்தது. ராஜஸ்தானில் பிரதமர் மோடியும், தெலங்கானாவில் ராகுல் காந்தியும் கடைசிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசாகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியை, வீழ்த்த தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக காங்கிரசுடன், தெலுங்கு தேசம் கூட்டணி வைத்துள்ளது. மறுபுறம் டிஆர்எஸ் கட்சி, ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இங்கு முஸ்லிம்களின் வாக்கு வங்கி அதிகம் என்பதால் அது டிஆர்எஸ் கட்சிக்கு சாதகமாக அமையக்கூடும்.

தெலங்கானாவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், ராகுல் காந்தி இரு தினங்களுக்கு மேலாக பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று ராகுல் காந்தியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

ராஜஸ்தானை பொறுத்தவரை ஆளும் பாஜக-வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு முதல்வர் வேட்பாளரையே அறிவிக்காமல் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

ஆண்ட கட்சி தேர்தலில் மீண்டும் வென்றதில்லை என்ற வரலாறு இங்கு இருப்பதால், பாஜக-விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் மோடி, அமித் ஷா ஆகியோரின் பிரசாரம் தங்களை காப்பாற்றும் என பாஜகவினர் நம்புகின்றனர். பிரசாரத்தின் கடைசி நாளில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரத்தில் பேசிய மோடி, ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என காங்கிரஸ் உணர்ந்துவிட்டதால் சாதிய அரசியலை கையில் எடுத்திருப்பதாகவும், சாதாரண டீ வியாபாரியான தன்னால் நான்கு தலைமுறை ஆண்டவர்கள் செய்த ஊழலை வெளிக் கொண்டுவர முடிந்ததாகவும் தெரிவித்தார்.

Also watch
Loading...
First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்