Home /News /national /

விமர்சனங்களை தாண்டி வீறுநடை போடும் யோகி ஆதித்யநாத் - உ.பி-யை கைப்பற்றும் பாஜக..

விமர்சனங்களை தாண்டி வீறுநடை போடும் யோகி ஆதித்யநாத் - உ.பி-யை கைப்பற்றும் பாஜக..

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

Yogi Adityanath | உ.பி.,யில் பாஜக சார்பில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் முதலமைச்சர் ஆதித்யநாத் மட்டுமே. இதற்கு முன்னர் கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோதிலும், அவர்கள் 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

மேலும் படிக்கவும் ...
    உத்தரபிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பத்திரிகைகளால் "இந்து மதகுரு", "இந்து துறவி", என்று அழைக்கப்படுபவர்.   உத்தராகண்டில் உள்ள கர்வாலில் பிறந்த யோகி ஆதித்யநாத்தின். இயற்பெயர் அஜய் சிங் பிஷ்ட். 1990-களில் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்ட முன்னாள் எம்.பி., மஹந்த் ஆதித்யநாத்தை, குருவாக ஏற்றுக்கொண்டார். மஹந்த் ஆதித்யநாத், தனது வாரிசாக அஜய் சிங் பிஷ்ட்-டை அறிவித்தார். இதனை தொடர்ந்து தனது பெயரை யோகி ஆதித்யநாத் என மாற்றிக்கொண்டார். மஹந்த் ஆதித்யநாத்தின் மறைவுக்குப் பின்னர் 2014ம் ஆண்டில் கோரக்நாத் கோயிலின் தலைமை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    1998-ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கிய ஆதித்யநாத், அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 26. தொடர்ந்து 5 முறை அதே தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்றார். 5 முறை தொடர்ந்து எம்.பி.,யாக இருந்தும் அவரது சர்ச்சை கருத்துக்களால் அமைச்சராக நியமனம் செய்யப்படவில்லை.

    Also Read: கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நெருங்கும் பாஜக.. ஆட்சியை தக்க வைக்குமா?

    யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சராக முன்னிறுத்த வேண்டும் என்று அயோத்தி மற்றும் கோரக்நாத் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்கள் மூலமாக துறவிகள் வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தாலும், 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு யோகி ஆதித்யநாத்தே முக்கிய காரணம் என கருதிய மேலிடம் அவரை அரியணையில் ஏற்றியது.

    உ.பி.,யில் பாஜக சார்பில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் முதலமைச்சர் ஆதித்யநாத் மட்டுமே. இதற்கு முன்னர் கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோதிலும், அவர்கள் 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யவில்லை. 2022 சட்டமன்றத் தேர்தலில்தான் யோகி ஆதித்யநாத் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read: உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

    கோரக்பூர் மக்களவை தொகுதியில் எம்.பி.யாக இருந்த அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரானார். இந்த முறை கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே யோகி முன்னிலை வகித்து வருகிறார். உ.பியில் ஆளும் பாஜக பெரும்பான்மை இடங்களுடன் வெற்றிப்பெறும் சூழல் உள்ளது. இதனையடுத்து யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Election 2022, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி