Home /News /national /

5 மாநில சட்டமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெறுகிறது... உ.பி.யில் 54 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

5 மாநில சட்டமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெறுகிறது... உ.பி.யில் 54 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

5 State Election | மினி மக்களவை தேர்தலாக கருதப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதியான வியாழக்கிழமை வெளியாகிறது.

5 State Election | மினி மக்களவை தேர்தலாக கருதப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதியான வியாழக்கிழமை வெளியாகிறது.

5 State Election | மினி மக்களவை தேர்தலாக கருதப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதியான வியாழக்கிழமை வெளியாகிறது.

    உத்தரப்பிரதேசத்தில் இன்று 54 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனோடு, 5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவு பெறுகிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதியான வியாழன் அன்று அறிவிக்கப்படவுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர், மாவ், ஜழன்பூர், காஜிர்பூர், சந்தவ்லி, மிர்சாப்பூர், பாதோஹி மற்றும் சோனபத்ரா மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 20-ம்தேதி தொடங்கியது. இதில், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 14-ம்தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    இதையும் படிங்க - NSE முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைது: பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை

    உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மார்ச் 3 மற்றும் மார்ச் 7-ம் தேதியான இன்று 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

    மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    உத்தரப்பிரதேசத்தில் 403, பஞ்சாபில் 117, உத்தராகண்டில் 70, மணிப்பூரில் 60, கோவாவில் 40 என மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகள் இந்த 5 மாநிலத்தில் வருகின்றன. மினி மக்களவை தேர்தலாக கருதப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம்தேதியான வியாழக்கிழமை வெளியாகிறது.

    இதையும் படிங்க - 'ஆசிரியர்கள் அடிக்கிறார்கள்' : போலீஸ் எஸ்.ஐ.யிடம் புகார் அளித்த 3ம் வகுப்பு மாணவன்

    உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்துள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பிரியங்கா இருப்பதால் உத்தரப்பிரதேச தேர்தல் முடிவை ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்த்துள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி