Home /News /national /

4 முறை உ.பி. முதல்வர்.. தலித் சமூகத்தின் முகம் - ஆரவாரமே இல்லாமல் உ.பி தேர்லை சந்தித்த மாயாவதி..

4 முறை உ.பி. முதல்வர்.. தலித் சமூகத்தின் முகம் - ஆரவாரமே இல்லாமல் உ.பி தேர்லை சந்தித்த மாயாவதி..

மாயாவதி

மாயாவதி

Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் அவரே முதலமைச்சர் நாற்காலியில் அமரவும் வாய்ப்புண்டு..

  நான்கு முறை முதலமைச்சர்.. தலித் சமூகத்தின் முகம்.. சிறந்த நிர்வாகி என அறியப்படுபவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. ஆனால், நடந்துமுடிந்த தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சி ஆரவாரமே இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது என்றே கூற வேண்டும்.

  உத்தரபிரதேச முதலமைச்சர் வேட்பாளர்களான யோகி ஆதித்நாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்களை விட அனுபவம் வாய்ந்தவர் மாயாவதி. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறான அவரின் அமைதியான அணுகுமுறை மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தின. இதனால், அவரது கட்சி ஆட்சியை பிடிக்க சிறு வாய்ப்பிருப்பதாக கூட அரசியல் நோக்கர்கள் கூறவில்லை.

  மாயாவதியின் இந்த மவுனம் அவரது அரசியல் வாழ்க்கையையும் கட்சியின் எதிர்காலத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பாஜகவின் வெற்றிக்கு உதவவே மாயாவதி நாடகமாடுகிறார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தங்கள் யுத்தியை மாற்றி பரப்புரை செய்ததாக விளக்கம் அளித்தனர் கட்சியினர். மாயாவதி கடைசியாக வெற்றி பெற்ற 2007- ஆம் ஆண்டு தேர்தலின் போது, சமூக சமத்துவம் என்ற கொள்கையுடன் களம் இறங்கினார்.

  Also Read: மீண்டும் அரியணை ஏறுவாரா அகிலேஷ்?

  தலித் முன்னேற்றம் என முழங்கி வந்த அவர், உயர் ஜாதியினரையும் இணைத்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் தேர்தலை சந்தித்தார். அவர் நினைத்தது போலவே, பெரும் வெற்றியையும் பெற்றார். ஆனால் அந்த ஐந்து ஆண்டுகால மாயாவதியின் ஆட்சி கடும் விமர்சனங்களை சந்தித்தது. 2 ஆயிரம் கோடியில், உத்தரபிரதேசத்தின் பல இடங்களில் தனக்கு தானே சிலைகளை அமைத்துக் கொண்டார். அவரின் நிர்வாக திறனும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. 2012 தேர்தலில் படுதோல்வியை கண்ட மாயாவதி அதன் பிறகு மீளவே இல்லை.

  அரசியல்வாதிகள் நீண்ட காலம் அதிகாரத்தில் இல்லாவிட்டால், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகளை கவனிப்பார்கள் என கூறப்படுவதுண்டு. ஆனால் மாயாவதியோ, தனது கட்சியின் மீள்ச்சிக்கு சிறு துரும்பை கூட தூக்கி போடவில்லை என கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.தலித் மேம்பாடு என்ற மாயாவதியின் கொள்கைகளை கையிலெடுத்துக் கொண்டுள்ள பாஜக, அதனுடன் தேசியவாதத்தையும் கலந்து அரசியல் செய்கிறது. உத்தரபிரதேசத்தில், மாயாவதியின் இழப்பு, பாஜக-வின் வளர்ச்சி என்றே பார்க்கப்படுகிறது.

  Also Read: உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போவது யார்.? இன்று வாக்கு எண்ணிக்கை

  தற்போதைய தேர்தல் முற்றிலும் பாஜகவுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சிக்கும் இடையிலானது மட்டுமே என கூறும் அரசியல் நோக்கர்கள், மாயாவதியை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.பாஜக அரசின் மீதான கடுமையான அதிருப்தியே தனக்கு சாதகமாக உள்ள காரணி என கூறும் பகுஜன் சமாஜ், இதற்கு அனைவருக்குமான வளர்ச்சி என்ற தங்கள் கொள்கை உதவும் என தெரிவிக்கின்றனர்.மாயாவதிக்கு இது சாத்தியப்பட்டால் சில பத்து இடங்களிலாவது அவர் வெற்றி கொள்வார். அப்போது அதன் அறுவடை அவருக்கு பெருத்த பலனளிக்கும். அதுவும் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் கிங் மேக்கராக அவதரிப்பார்.

  403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்டப்பேரவையே அமையும் என ஆருடம் கூறப்படும் நிலையில், பாஜகவும் சமாஜ் வாடி கட்சியும் மாயாவதியிடமே ஆதரவு கோரும். கடந்த காலங்களில் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்த மாயாவதிக்கு யாருக்காவது ஒருவருக்கு ஆதரவு அளிப்பது எளிதான ஒன்றுதான்.பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் அவரே முதலமைச்சர் நாற்காலியில் அமரவும் வாய்ப்புண்டு.., முன் உதாரணம் கர்நாடாகாவின் குமாரசாமி.

   
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Akilesh yadav, Election 2022, Mayawati, Uttar pradesh

  அடுத்த செய்தி