கேரளாவின் கல்வியறிவினால்தான் பாஜக அங்கு வளர முடியவில்லை- பாஜக மூத்த தலைவர் ஒப்புதல்

கேரள பாஜக தலைவர் ராஜகோபால்

கேரளா தேர்தல் களம் | Kerala Assembly Election 2021 | கேரளாவில் பாஜக ஏன் வளரவில்லை? கேரளாவின் கல்வியறிவு, இடதுசாரி, தேர்தல் செய்திகள், பாஜக தலைவர் கூறும் காரணத்தை காண்க

 • Share this:
  கேரளாவில் 90 சதவீதம் கல்வியறிவு உள்ளது, சிந்திக்கிறார்கள் எனவே பாஜக  கேரளாவில் வளரவில்லை என்று பா.ஜ. தலைவர் ஓ.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

  கேரளாவில் பாஜகவினால் வேரூன்ற முடியாமல் போனதற்கு அந்த மாநிலத்தில் 90 சதவீதம் கல்வியறிவு இருப்பதும் ஒரு காரணம் என்று கேரள பாஜகவின் மூத்த தலைவரும், அந்த மாநில சட்டமன்றத்தில் பாஜகவுக்கு இருக்கும் ஒரே உறுப்பினருமான ஓ. ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

  ஹரியாணா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சியடைந்த பாஜகவால் கேரளாவில் வளர முடியாமல் போனது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, "கேரளா ஒரு வேறுபட்ட மாநிலம். இங்கு பாஜக வளராமல் இருப்பதற்கு 2,3 தனித்துவமான காரணங்கள் உள்ளன.

  கேரளாவில் 90 சதவிகித கல்வியறிவு உள்ளது. அவர்கள் சிந்திக்கிறார்கள் விவாதபூர்வமாக இருக்கிறார்கள். இவை படித்த மக்களின் பண்புகள். இது ஒரு பிரச்னை. கேரளாவில் 55 சதவிகிதம் இந்துக்களும் 45 சதவிகிதம் சிறுபான்மையினரும் இருப்பது இந்த மாநிலத்திற்கு உரிய சிறப்பம்சம்.

  இது இன்னொரு பிரச்னை. ஒவ்வோர் அரசியல் கணக்கிலும் இந்த அம்சம் உள்ளே வருகிறது. இதனால்தான் பிற மாநிலங்களுடன் கேரளாவை ஒப்பிட முடியாது. இங்கு சூழ்நிலையே வேறு. ஆனால் இங்கு நாங்கள் மெதுவாகவும் நிலையாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறோம்.

  பினராயி விஜயனை நான் பாராட்டுவதற்குக் காரணம் நல்லது செய்தால் நாம் பாராட்டத்தான் வேண்டும் என்பதற்காகவே. அரசியல் என்றால் பொய்தான் பேச வேண்டும் என்பதில்லை, உண்மையைப் பேச வேண்டும். விஜயனிடம் நல்ல நிர்வாகத் திறமை உள்ளது.

  மிகுந்த ஏழ்மையான நிலையிலிருந்து இந்த இடத்த்துக்கு வந்துள்ளார் பினராயி விஜயன். இந்தமுறை பாஜக இரட்டை இலக்க இடங்களை என்று நம்புகிறேன். இது சாத்தியம்தான்” என்கிறார் ராஜகோபால்.
  Published by:Muthukumar
  First published: