பாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரங்கள்- உள்ளூர் மக்கள் விசாரித்ததில் டிரைவர் ஓட்டம்- 4 அதிகாரிகள் சஸ்பென்ட்

ஈவிஎம்

அசாமில் கரீம்கஞ்ச் பகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் காரில் வாக்களிக்கும் இயந்திரமான ஈவிஎம் இயந்திரங்கள் இருந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.

 • Share this:
  அசாமில் கரீம்கஞ்ச் பகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் காரில் வாக்களிக்கும் இயந்திரமான ஈவிஎம் இயந்திரங்கள் இருந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.

  இதனைத் தொடர்ந்து கரீம்கஞ்ச் பகுதி தேர்தல் அதிகாரியிடமிருந்து விளக்க அறிக்கை கேட்டுள்ளது தேர்தல் ஆணையம். அசாமில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து வரும் வேளையில் பாஜக எம்.எல்.ஏ. கார் ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பல இருப்பது சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  கார் பதிவு எண் AS 10B 0022 இந்தக் கார், பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் என்பவருடையது என்பதும் தெரியவந்தது. அசாம் பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கதில் பதிவிட அது வைரலாகப் பரவியது, தீயாக பரபரப்பு ஏற்படுத்தியது.

  தேர்தல் மாநிலங்களில் ஈவிஎம்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடியேதான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காண்டி இந்த வைரல் வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இனியாவது விழிப்பாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.  மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் பயன்பாடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக கேள்வி எழுப்பி அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

  அசாமில் 2ம் கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் வெள்ளை நிற பொலேரோ கார் ஒன்று கரிம்கஞ்ச் கனிசெய்ல் பகுதியில் வியாழன் இரவு 10,30 மணிக்கு கண்டுப்பிடிக்கப்பட்டது.

  உள்ளூர்வாசிகள் என்னவென்று கேட்ட போது டிரைவர் ஓட்டம்பிடித்தார். அப்போது அப்படி என்னதான் காரில் இருக்கிறது என்று அவர்கள் தேடிய போது ஈவிஎம் எந்திரங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

  இதனை வீடியோவாக பத்திரிகையாளர் அதானு புயன் பதிவிட்டார். ஈவிஎம்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது எப்படி ? தேர்தல் நேரத்தில்?

  இந்தக் கார் பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணேந்துவுடையதுதான் என்பதற்கு தேர்தல் சொத்து கணக்கு விவரத்தில் இவர் தனக்கு ஒயிட் பொலீரோ இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

  இந்தச் சம்பவத்தை அடுத்து தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியது. இதனையடுத்து 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: