முகப்பு /செய்தி /இந்தியா / தனியாக இருக்கும் வயதானவர்கள் டார்க்கெட் - மலப்புரத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள்

தனியாக இருக்கும் வயதானவர்கள் டார்க்கெட் - மலப்புரத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மலப்புரத்தில் திருட்டு காரணமான இந்த கொலைகள் நடந்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

மலப்புரம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வயதான பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டனர். வெள்ளாரம்பு பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். வீட்டில் கொள்ளை நடந்ததற்கான தடயம் இருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடச்சேரிக்கு அருகில் உள்ள தாவனூரை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.

Also Read: குளியல் வீடியோவை படம்பிடித்து, டார்ச்சர் செய்த கணவர்.. போலீஸில் சொல்லி கம்பி எண்ண விட்ட மனைவி

மூதாட்டியின் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க க்ரில் கேட்டி பூட்டி இருந்துள்ளது. நீண்ட நேரமாகியும் மூதாட்டியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த அவரது உறவினர் வீட்டின் பின்பக்க கதவு வழியே உள்ளே சென்று பார்த்துள்ளார். மூக்கு மற்றும் வாய் பகுதியில் இரத்தம் வழிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூதாட்டியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலப்புரம் பகுதியில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் அடுத்தடுத்த கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. வீட்டில் தனியாக இருக்கும் வயதான நபர்கள் ஜாக்கிரதையாக இருக்க போலீஸார் அறிவுறுத்தினர். இரண்டு சம்பவங்களும் திருட்டுக்காக நடந்துள்ளது என போலீஸார் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பு ஸ்பெஷல் டீம் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: வருங்கால கணவருடன் தனிமையில் சந்திப்பு.. செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இதில் வெள்ளாரம்பு பகுதியில் 60 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முகமது ஷஃபி என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வேலைப்பார்த்து திரும்பிய முகமது ஷஃபி நகைக்காக இந்த கொலையை செய்ததாக போலீஸார் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Double murder, Kerala, Kerala police