Home /News /national /

மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்.. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பாஜக ஆதரவு!

மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்.. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பாஜக ஆதரவு!

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டேவின் பதவியேற்பு விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட திருப்புமுனையாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெளியே இருந்து ஆதரவு தருவதாக பாஜக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை மாநில எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    முன்னதாக இன்று மதியம் சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மும்பை வந்து ஏக்நாத் ஷிண்டே தேவேந்திர பட்னாவிஸ்சை சந்தித்தார். பின்னரும் இருவரும் இணைந்து மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினர். பின்னர்,தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் கூட்டாக கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்.

    பதவியேற்பு விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும். ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் என்றார். மேலும், 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சிவசேனாவுக்கு மக்கள் ஆதரவு அளித்து வெற்றி பெற செய்தனர். ஆனால், உத்தவ் தாக்ரே கூட்டணியை விட்டு வெளியேறி பாலா சாஹேப் தாக்ரே காலம் முழுவதும் எதிர்த்த நபர்களோடு கூட்டணி சேர்ந்தார். எனவே, மக்கள் விருப்பத்திற்கு மாறான கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டவே ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது என்றார் தேவேந்திர பட்னாவிஸ்.


    புதிதாக முதலமைச்சர் பொறுப்பேற்கும் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில்,' 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருந்தாலும் முதலமைச்சர் வாய்ப்பை எங்களுக்கு தந்த பாஜகவுக்கு நன்றி. இந்த பெருந்தன்மைக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு நன்றி' என்றார்.

    இதையும் படிங்க: பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமைக்கும் வரி.. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

    தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏக்நாக் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது, மகாராஷ்டிரா அரசியில் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Maharashtra, Shiv Sena

    அடுத்த செய்தி