Home /News /national /

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே... துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே... துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று கொண்டார். மாநில துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்று கொண்டார்.

  • Last Updated :
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி தனது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியால் ஆட்சியை இழந்தது. இதையடுத்து புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்சக்கட்ட திருப்புமுனையாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெளியே இருந்து ஆதரவு தருவதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்திருந்தார்.

    ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் இணைந்து மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே பேசுகையில்,' 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருந்தாலும் முதலமைச்சர் வாய்ப்பை எங்களுக்கு தந்த பாஜகவுக்கு நன்றி. இந்த பெருந்தன்மைக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு நன்றி' என்றார்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பக்தசிங் கோஷியாரி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Maharashtra

    அடுத்த செய்தி