Home /News /national /

மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் எக்நாத் ஷிண்டே!!

மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் எக்நாத் ஷிண்டே!!

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

Maharashtra CM Eknath Shinde : மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே.. அவருக்கு எதிராக வாக்களித்த சிவசேனா எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. சபாநாயகர் ராகுல் நர்வேகர் முன்னிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 164க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தரப்பு எம்எல்ஏவான சந்தோஷ் பங்கார் முதலமைச்சர் ஷிண்டே தரப்பு ஆதரவு எம்எல்ஏவாக சேர்ந்து கொண்டார். இதையடுத்து உத்தவ் தாக்ரே தரப்பு மேலும் பலவீனம் அடைந்துள்ளது.

    இன்று காலை அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை பாஜகவின் சுதிர் முன்கன்டிவார் மற்றும் சிவசேனாவின் பரத் கோகாவலே முன் மொழிந்தனர். இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு 164க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு தனது பலத்தை நிரூபித்துள்ளது.

    பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு நேற்று தொடங்கியது.நேற்று நடைபெற்ற இந்த சிறப்பு அமர்வில், பாஜகவின் ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் தற்போது நாட்டின் இளம் சபாநாயகராக ராகுல் உள்ளார்.

    இதையும் படிங்க: பாஜக கூட்டத்தை உளவு பார்க்க சென்ற தெலங்கானா அதிகாரி சிக்கினார்

    இந்நிலையில் சிவசேனா கட்சியில் அதிக எம்எல்ஏக்களை வைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு கொறடா அரசுக்கு எதிராக வாக்களித்த உத்தவ் தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரை செய்துள்ளார். உத்தவ் தாக்ரேவின் மகனான ஆதித்யா தாக்ரே அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், இவரும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உட்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Maharashtra, Shiv Sena

    அடுத்த செய்தி