முகப்பு /செய்தி /இந்தியா / பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 2 ஆம் வகுப்பு மாணவி தேள் கொட்டியதால் பலி

பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 2 ஆம் வகுப்பு மாணவி தேள் கொட்டியதால் பலி

தேள் கொட்டியதில் பள்ளி மாணவி மரணம்

தேள் கொட்டியதில் பள்ளி மாணவி மரணம்

இந்த சம்பவத்திற்கு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பள்ளிக்கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது மாணவி தேள் கொட்டி உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பேமேதேரா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி திவ்யா மன்டாவி. பாந்தி என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இவர் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற சிறுமி திவ்யா அங்குள்ள பள்ளி மைதானத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த தேள் ஒன்று மாணவியை கடித்துள்ளது. வலியால் துடித்துப் போய் மயங்கி விழுந்த மாணவியை அங்கிருந்தவர்கள் வேக வேகமாக தூக்கிச் சென்று தாதி என்ற கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் அங்கிருந்து பேமதேரா மாவட்ட மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிறுமியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மருத்துவர்கள் அந்த சிறுமியை தலைநகர் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆலோசனை தந்துள்ளனர்.

இதையும் படிங்க: ரவுடிகளுக்கு சிகரெட் பாக்கெட்டுகளை விற்க உதவி பங்குபோட்ட போலீஸ் - 4பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலமாக ராய்பூர் சென்று கொண்டிருந்த போது, வழியிலேயே சிறுமி திவ்யா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கு உடனடியாக ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chattisgarh, Girl dead