தினமும் குடித்துவிட்டு வந்து தன்னுடைய தாயை அடிக்கும் தந்தை மீது 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீ சில்லா மாவட்டத்தின் முஸ்தாபாத் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பாலகிருஷ்ணா. அவருடைய மனைவி தீபிகா. அவர்களுக்கு எட்டு வயதில் பரத் என்ற மகனும், 7 வயதில் சிவானி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணா தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வருவது வழக்கம். வீட்டுக்கு வந்தவுடன் மனைவியுடன் தகராறு செய்து அவரை அடிப்பது அன்றாடம் அவருக்கு வாடிக்கை. இதனை கவனித்து மனம் வெறுத்துப் போன அவருடைய மகன் பரத், ஸ்ரீசில்லா நகர காவல் நிலையத்திற்கு நேராக சென்று தந்தையுடைய நடவடிக்கை பற்றி புகார் கூறினான்.
இதையும் படிங்க: 2022 தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் : குடியரசு தலைவர் கையால் விருது வாங்கப்போகும் 46 ஆசிரியர்கள் இவர்கள் தான்..
உடனடியாக பாலகிருஷ்ணா, தீபிகா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல்துறையினர் தந்தை பாலகிருஷ்ணாவுக்கு தகுந்த ஆலோசனைகளை கூறி இனிமேல் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை துன்புறுத்தினால் உன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், தயக்கமின்றி துணிவுடன் காவல்துறையிடம் வந்து புகார் தெரிந்த சிறுவன் பரத்தை காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணா பாரட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.