இந்திய விமானப் படையில் சுமார் 2 ஆயிரம் பெண் வீராங்கணைகள் - அரசு பெருமிதம்

இந்திய விமானப்படை வீராங்கணைகளுள் 8 பேர் போர் ரக விமான ஓட்டிகள் ஆவர்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 12:44 PM IST
இந்திய விமானப் படையில் சுமார் 2 ஆயிரம் பெண் வீராங்கணைகள் - அரசு பெருமிதம்
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 26, 2019, 12:44 PM IST
இந்திய விமானப் படையில் ஜூலை 1-ம் தேதி வரையிலான தகவலின் அடிப்படையில் 1,905 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக மக்களவையில் அறிவிக்கப்பட்டது.

இந்திய விமானப்படை வீராங்கணைகளுள் 8 பேர் போர் ரக விமான ஓட்டிகள் ஆவர். இந்திய விமானப் படையில் பெண் வீராங்கணைகளின் பங்கு குறித்து ராணுவ இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் மக்களவையில் பெருமிதம் தெரிவித்தார்.

போர்ப்படையில் தேவைகளுக்கு ஏற்றாற் போலவும் யுத்திகளின் அடிப்படையிலும் பெண் வீராங்கணைகள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் இணை அமைச்சர் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “ஜூலை 1-ம் தேதி 2019 வரையிலான தகவல்கள் அடிப்படையில் இந்திய விமானப் படையில் 1,905 வீராங்கணைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 8 பேர் போர்விமான ஓட்டிகளாகவும் 17 பேர் நேவிகேட்டர்களாகவும் உள்ளனர். 2016-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் சார்பில் எஸ்எஸ்சி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 8 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும் பார்க்க: மணிக்கு 17 மரணங்கள்... பதற வைக்கும் சாலை விபத்துகளில் தமிழகத்துக்கு 2-வது இடம்!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...