Home /News /national /

மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. டியூஷன் செண்டருக்கு சீல்!

மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. டியூஷன் செண்டருக்கு சீல்!

Students

Students

ஒரு டியூஷன் செண்டரில் படித்து வந்த 8 மாணவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

டியூஷன் செண்டரில் படித்து வந்த 8 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த செண்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பெரும்தொற்று, முதல் அலை, இரண்டாவது அலை எனது தொடர்ந்து பரவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. ஊரங்கு காரணமாக தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள், மூடப்பட்டதால் பலரும் வாழ்வாதாரத்தை தொலைத்தனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்ததால் ஆன்லைன் கல்வி வாயிலாக மாணவர்கள் கற்றலை தொடர்ந்தனர்.

இதனிடையே கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி எனும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டாவது அலை தொற்றும் கட்டுக்குள் வந்ததையடுத்து, மாநில அரசுகள் ஒவ்வொரு தளர்வுகளாக அறிவித்து வருகின்றன.

இதில் முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் டியூஷன் உள்ளிட்ட தனிப்பயிற்சி மையங்களுக்கு திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒரு டியூஷன் செண்டரில் படித்து வந்த 8 மாணவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

Also Read: அம்மா உணவகத்தை மூட திட்டம்? – சென்னையில் ஊழியர்கள் போராட்டம்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வந்த டியூஷன் செண்டர் ஒன்றில் கடந்த அக்டோபர் 7ம் தேதியன்று மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த டியூஷன் மையத்தில் படித்து வந்த 125 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 7 மாணவர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சூரத் நகர நகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆஷிஷ் நாயக் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பாதிப்பு கண்டறியப்பட்ட அந்த டியூஷன் மையத்திற்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Also Read: வங்கதேசத்தில் வெடித்த மதக் கலவரம்.. 4 பேர் பலி..

இந்த அக்டோபர் மாதத்தில் இது போல கல்வி மையம் ஒன்றில் அதிக மாணவர்களுக்கு கொரொனா உறுதி செய்யப்படுவது இது இரண்டாவது முறை நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற மாணவர்கள் பலருக்கு கொரோனா உறுதியானதால் அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 
Published by:Arun
First published:

Tags: Corona, Covid-19, School students

அடுத்த செய்தி