Home /News /national /

பிரதமர் மோடி பிறந்தநாளில் ஜெட் விமானம் மூலம் இந்தியா வரும் 8 சிவிங்கிப் புலிகள்..!

பிரதமர் மோடி பிறந்தநாளில் ஜெட் விமானம் மூலம் இந்தியா வரும் 8 சிவிங்கிப் புலிகள்..!

பிரதமர் மோடி பிறந்தநாளில் ஜெட் விமானம் மூலம் பறந்து வரும் சிறுத்தை குட்டிகள்

பிரதமர் மோடி பிறந்தநாளில் ஜெட் விமானம் மூலம் பறந்து வரும் சிறுத்தை குட்டிகள்

பிரதமர் மோடியின் பிறந்தநாளான நாளை ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து போயிங் - 747 சிறப்பு ரக விமானம் மூலம் எட்டு சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்படவுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • intern, IndiaWindhoekWindhoekWindhoekWindhoek
    பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்வுகளுக்கும், நலத் திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி இந்தியாவிற்கு 70 ஆண்டுகளுக்குப் பின் சிவிங்கிப் புலிகள் மீண்டும் வரவுள்ளது. ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து போயிங் - 747 சிறப்பு ரக விமானம் மூலம் எட்டு சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்படவுள்ளன. இதில் 5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் அடக்கம்.

    இந்த சிவிங்கிப் புலி குட்டிகள் நமீபியாவில் உள்ள வின்டோக் தேசிய பூங்காவில் வளர்ந்தவை. பிரதமரின் பிறந்தநாளை ஓட்டி இந்த சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு நமீபியா வழங்குகிறது. 1952ஆம் ஆண்டுடன் சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,70 ஆண்டுகளுக்குப் பின் நாளை சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரும் இந்த சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில்  தரை இறங்குகின்றன. பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவில்  வளர்க்கப்படவுள்ளன.

    ஷாங்காய் கூட்டுறவு உச்ச மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, நாளை இந்தியா திரும்பியவுடன் மத்தியப் பிரதேசம் வருகை தந்து இந்த சிவிங்கிப் புலிகளை தேசிய பூங்கா வனத்தில் திறந்து விட உள்ளார்.


    உலகின் அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்றான சிவிங்கிப் புலிகள் தற்போது உலக அளவிலேயே மொத்தம் 7,000 தான் இருப்பதாக IUCN அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்னரே சிவிங்கிப் புலிகள் பல வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், 2020 ஆண்டு முதல் இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகளை கொண்டுவந்து வளர்க்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து வரும் நிலையில், மேலும் சில தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: திருடனை ரயில் ஜன்னல் கம்பியில் தொங்கவிட்ட பயணிகள்.. 15 கிமீ தூரம் கெஞ்சி கதறிய திருடன்

    இந்தியாவில் புலிகள் இனமும் வேகமாக அழிந்து வந்த நிலையில் புராஜெக்ட் டைகர் என்ற திட்டத்தை 1972ஆம் ஆண்டு அரசு முன்னெடுத்து தற்போது மீண்டும் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உரிய நிலையை அடைந்துள்ளது. இதே போல் சிறுத்தை பாதுகாப்பு திட்டத்தையும் மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Birthday, Modi Birthday, PM Modi

    அடுத்த செய்தி