• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாளை ரம்ஜான் பண்டிகை: வீட்டிலேயே தொழுகை நடத்த ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வேண்டுகோள்

நாளை ரம்ஜான் பண்டிகை: வீட்டிலேயே தொழுகை நடத்த ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வேண்டுகோள்

தொழுகை

தொழுகை

ரம்ஜான் பண்டிகை நாளுக்கான சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்துமாறு ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதிலும் நாளை மே 14 வெள்ளிகிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளுக்கான சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்துமாறு ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நாடு முழுதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்து ஆங்காங்கே ஊரடங்குகளும் சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளன. சமூக இடைவெளி மிக மிக முக்கியம் என்பதால் பொதுவெளியில் கூடுவது கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளரான மவுலானா ரஜியுல் இஸ்லாம் நத்வீ விடுத்துள்ள அறிக்கையில்,

    “ஈத் பெருநாளின் சிறப்பு தொழுகை ஜாமியா மசூதி, ஈத்கா மசூதி மற்றும் தெரு மசூதிகளில் நடத்தபடுகிறது. தற்போதைய கோவிட் 19 பரவல் சூழலில் அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தொழுகை நடத்தப்பட வேண்டும்.

    இதில், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்கள் இருப்பது அவசியம். தொழுகையின் போது கண்டிப்பாக அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

    இவற்றில் வரும் பிரச்சனைகளை தவிர்க்க அனைவரும் தங்கள் வீடுகளிலேயே ஈத் தொழுகை நடத்துவது சிறப்பு. தொழுகைக்கு பின் ஈது வாழ்த்துக்களை கைகுலுக்கியோ, கட்டித் தழுவியோ பறிமாறத் தேவையில்லை.

    ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வது இஸ்லாமிய சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. எனவே, கரோனா பரவல் சூழலில் முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

    அதேசமயம், நமது இறை நடவடிக்கைகள் எதுவும் எந்தவிதமான மனிதநேயங்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. கடைசிநேரத்தில் பொருட்களை வாங்க சந்தைகளுக்கு சென்று கூட்டம் கூடுவதும் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: