Home /News /national /

பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.8 லட்சத்திற்கு விற்பனை ஆன ஆடு

பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.8 லட்சத்திற்கு விற்பனை ஆன ஆடு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விற்பனையான ஆட்டின் எடை சுமார் 170 கிலோ எனவும், இதன் சிறப்பம்சமாக காதுகள் 16 முதல் 17 இன்ச்கள் நீளமாக உள்ளது

    நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக பார்க்கப்படும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கவுசர்பாக் என்ற சந்தையில் ஒரு ஆடு ரூ.8 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

    இந்த சந்தையானது நாட்டிலேயே முன்னணி கால்நடை விற்பனை சந்தைகளில் ஒன்று. இங்கு மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகள், மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். அவ்வாறு தான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோட்டா என்ற இடத்தில் இருந்து வந்த ஆடு ஒன்று ரூ.8 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆட்டின் எடை சுமார் 170 கிலோ எனவும், இதன் சிறப்பம்சமாக காதுகள் 16 முதல் 17 இன்ச்கள் நீளமாக உள்ளது எனவும் ஆட்டை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஆசிப் கூறியுள்ளார். இந்த ஆட்டை பராமரித்துப் பார்த்துக்கொள்வதற்காகவே இதன் உரிமையாளர் இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

    இதுமட்டுமல்லாது போபால் பகுதியில் இருந்து சுமார் 12 சிறப்பு ரக ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, அவை தலா ரூ.4 முதல் ரூ.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளன. இரண்டு ஆண்டுகள் கோவிட் முடக்கம் இருந்த நிலையில், இந்தாண்டு பக்ரீத் விழா விற்பனைக்கு எந்த தடையும் இல்லை. எனவே, இரண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆர்வத்துடன் மக்கள் இந்த சந்தையில் குவிந்து ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மெட்ரோ ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரபல யூடியூபர் கைது

    பெரும்பாலான ஆடுகள் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வருபவை. இவற்றை வாங்க விரும்புபவர்களுக்கு இவற்றை பக்ரீத் வரை வைத்து பாதுகாக்க வீட்டில் இடமோ வசதியோ இருப்பதில்லை. எனவே, கடை உரிமையாளர்களிடம் புக் செய்து வைத்து, பக்ரீத் பண்டிகைக்கு ஓரிரு தினத்திற்கு முன்னர் ஆடுகளை வாங்கி செல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Eid Mubarak

    அடுத்த செய்தி