விவசாயமும், விவசாயிகளும் தொழில் வடிவத்தில் முன்னேறினால் கிராமங்களில் சுய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி

விவசாயிகள் தொழில் வடிவத்தில் முன்னேறினால், கிராமங்களில் சுய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பேசியுள்ளார் பிரதமர் மோடி.

விவசாயமும், விவசாயிகளும் தொழில் வடிவத்தில் முன்னேறினால் கிராமங்களில் சுய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றினால், விவசாயத்தில் தன்னிறைவு பெற முடியும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் புதிதாக ராணி லஷ்மி பாய் மத்திய வேளாண் பல்கலையின் நிர்வாக கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியபோது, விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. கிராமத்தின் மொத்த பொருளாதார சுயசார்பை உறுதி செய்யப்பட வேண்டும்.

விவசாயியை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும். இதன் மூலம் விவசாயம் தன்னிறைவு பெறும். விவசாயம், விவசாயிகள் தொழில் வடிவத்தில் முன்னேறினால், கிராமங்களில் சுய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
விவசாயத்தில் சுயசார்பு குறித்து சிந்திக்கும்போது, உணவு தானியங்களில் மட்டும் தன்னிறைவு பெறாமல், கிராமத்தின் முழு பொருளாதாரத்தின் சுயசார்பையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.ட்ரோன்கள் உள்ளிட்ட  தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெட்டுக்கிளி பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது. புந்தேல்கண்ட் பகுதியில், வறட்சி பாதித்த பகுதிகளில் தண்ணீர் கிடைக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது என்று பிரதமர் பேசியுள்ளார்.
First published: August 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading