• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திரிபுரா வன்முறை குறித்து பதிவிட்ட 102 பேர் மீது உபா சட்டத்தில் வழக்கு!

திரிபுரா வன்முறை குறித்து பதிவிட்ட 102 பேர் மீது உபா சட்டத்தில் வழக்கு!

உபா சட்டம்

உபா சட்டம்

திரிபுரா வன்முறை தொடர்பாக  கருத்துகளை வெளியிட்டதற்காகவும் பதிவு செய்தததற்காகவும் பத்திரிக்கையாளர்கள் உட்பட 102 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள திருபுரா போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா கூறியுள்ளது.

  • Share this:
    திரிபுராவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்பாக கருத்துகளை வெளியிட்ட 102 பேர் மீது அம்மாநில போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில்  சிறுபான்மையினர் மதத்தினருக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக சில வலதுசாரி அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

    இதனிடையே, திரிபுரா வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்ட 102 பேர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் ( UAPA Act) கீழ் திரிபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா (editors guilt of india கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா வன்முறை தொடர்பாக  கருத்துகளை வெளியிட்டதற்காகவும் பதிவு செய்தததற்காகவும் பத்திரிக்கையாளர்கள் உட்பட 102 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள திருபுரா போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்கள் பல்வற்றிற்கும் திரிபுரா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இதையும் படிங்க: பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!


    திரிபுரா வன்முறை தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து வந்த வழக்கறிஞர்கள் இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததன் தொடர்ச்சியாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  திரிபுரா பற்றி எரிகிறது (tripura is burning) என்று பதிவிட்டதற்காக ஷியாம் மீரா சிங் என்பவர் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ளது. மத வன்முறை தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக இத்தகைய கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    வன்முறையை கட்டுப்படுத்துவதில் தங்களின் தோல்வியை திசை திருப்பவே இதுபோன்ற வழக்குகளை மாநில அரசு பதிந்துள்ளது. உபா போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் இத்தகைய சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடுவதை அரசாங்கம் ஒடுக்க முடியாது.  பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக  இந்த சம்பவம் தொடர்பாக அரசு சுதந்திரமான வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

    மேலும் படிக்க: பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த 5 வயது சிறுவனுக்கு தீபாவளி நாளில் நேர்ந்த துயரம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: