ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜி-20 மாநாடு ஆலோசனைக்கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

ஜி-20 மாநாடு ஆலோசனைக்கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

ஜி20 தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

2023ம் ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 2022 டிசம்பர் 1ம் தேதி முதல் 2023 நவம்பர் 30ம் தேதி வரை ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இதற்காக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. டெல்லியில் நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.

இதையும் படிக்க : மசோதாக்களில் ஆளுநர் உடனடியாக கையெழுத்து போடவேண்டும் என்ற விதி கிடையாது - தமிழிசை

இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்.

First published:

Tags: ADMK, CM MK Stalin, Delhi, Edappadi Palaniswami, G20 Summit