₹ 7,220 கோடி அந்நியச் செலாவணி மோசடி - நகைக்கடைக்கு நோட்டீஸ்

கொல்கத்தாவைச் சேர்ந்த நகைக்கடை நிறுவனம் 7,220 கோடி ரூபாய் அன்னிய செலாவணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

₹ 7,220 கோடி அந்நியச் செலாவணி மோசடி - நகைக்கடைக்கு நோட்டீஸ்
கோப்புப் படம்
  • Share this:
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக, கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி என்ற நிறுவனம் மீது கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்த சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், நிறுவன இயக்குநர் நிலேஷை கைது செய்தனர். இதனிடையே, அமலாக்கத்துறையும் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 7,220 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை கண்டறிந்துள்ளது.Also read... ஞானம் உள்ள ஆ.ராசா பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்? ஆர்.பி உதயகுமார் பதில்

இது தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தில் மிகப்பெரிய தொகைக்கு நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading