• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சாந்தா கோச்சார் 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்! அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

சாந்தா கோச்சார் 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்! அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார்.

முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார்.

, வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக, சந்தா கொச்சார் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 500 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ-வாக இருந்த காலக் கட்டத்தில், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னரே,  தனது பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார்.

    மேலும், கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு வழங்கிய பணப்பலன்களையும் திருப்பி வழங்குமாறு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக, சாந்தா கோச்சார் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 500 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

    அத்துடன், சட்டத்துக்கு புறம்பாக கடன் வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, விரைவில் அவர்களின் சொத்துகள் முடக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: