Home /News /national /

11 மாநிலங்களில் என்ஐஏ சோதனை… பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது

11 மாநிலங்களில் என்ஐஏ சோதனை… பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்லும் அதிகாரிகள்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்லும் அதிகாரிகள்.

அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 11 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய சோதனை அதிகாலை 5 மணி வரையில் நீடித்ததாகவும் இதில் 1500க்கும் அதிகமான அதிகாரிகள், போலீசார் இடம்பெற்றதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்.. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டாவும் நியமணம்..

    சோதனையின்போது 100-க்கும் அதிகமான போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது, பயிற்சி முகாம்கள் அமைத்து அடிப்படைவாத சிந்தனை உடையவர்களை தடை செய்யப்பட்ட இயக்கங்களில் சேர வைப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பை சேர்ந்த 106 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

    கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்க வந்த பெண் கூட்ட நெரிசலில் பலி.. ஹைதராபாத்தில் சோக சம்பவம்..

    தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில்  தெலங்கானாவில் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். இன்று நடந்த சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விபரம் குறித்து அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Enforcement Directorate, NIA

    அடுத்த செய்தி