Home /News /national /

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி ஆஜராக மீண்டும் சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி ஆஜராக மீண்டும் சம்மன்

சோனியா காந்திக்கு மீண்டும் சம்மன்

சோனியா காந்திக்கு மீண்டும் சம்மன்

கடந்த ஜூன் 2ஆம் தேதி சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரியிருந்தார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன் ஜூன் 23ஆம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு ஏற்கனவே ஜூன் 8ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூன் 2ஆம் தேதி சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரியிருந்தார். இதையடுத்து சம்மன் தேதியை ஜூன் 23ஆம் தேதிக்கு அமலக்கத்துறை தற்போது ஒத்திவைத்துள்ளது.

    அதேபோல் ராகுல் காந்திக்கும் ஜூன் 8ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறி விலக்கு கேட்டார். இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் அளித்துள்ளது.

    இந்த வழக்கின் பின்னணி

    அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரே ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.

    இதையும் படிங்க: ராஞ்சி கலவரத்தில் இருவர் பலி - மாநில அரசுகள் உஷாராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை

    இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது. இதனிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கப் பிரிவு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Enforcement Directorate, National herald, Sonia Gandhi

    அடுத்த செய்தி