• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்... கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்... கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர்

கோப்புப்படம்

கோப்புப்படம்

குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்க உள்ளதாக 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

  • Share this:
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றும் நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இதனை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

    நடப்பு ஆண்டி முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அதைத்தொடர்ந்து அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஒன்றாம் தேதி திங்கட் கிழமை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டில் முதல் முறையாக காகிதமில்லாமல் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குடியசு தலைவரின் உரையை புறக்கணிப்பதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

    மேலும் படிக்க... மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை..



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: