பொருளாதார வளர்ச்சி, பண வீக்க விகிதம்! நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கையின் தகவல்கள்

நிர்மலா சீதாராமன்

 • Share this:
  2020-2021 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆறு சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதேபோல், ஏப்ரல் 2019-ல், நாட்டின் பணவீக்கம் 3.2 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் அது 2.6 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

  பொருளாதார ஆய்வறிக்கை குறித்து பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், 2019-ல் நிலவிய உலகப் பொருளாதார மந்தநிலையால், இந்தியாவிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். நாட்டில் வளங்களை உருவாக்குவதே, இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் மையப்பொருள் என கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறினார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: