Home /News /national /

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: 8-8.5% வளர்ச்சி எதிர்பார்ப்பு

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: 8-8.5% வளர்ச்சி எதிர்பார்ப்பு

பொருளாதார ஆய்வறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கை

2022-23ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என்று பொருளாதார நிதிநிலை அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக 2022-23 நிதியாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கியும் 7.5 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும் ...
    மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில்,  நாட்டின் பொருளாதார அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், 2022-23ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 8-8.5 சதவீதமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    17வது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப். 11ம் தேதி வரையும், அடுத்த கூட்டம் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். தொடக்க நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்  உரையாற்றினார்.

    குடியரசுத் தலைவர் உரையை தொடர்ந்து 2022-23ம் ஆண்டுக்கான பொருளாதார நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், ‘2022-23 ஆம் ஆண்டின் வளர்ச்சியானது பரவலான தடுப்பூசி பாதுகாப்பு, விநியோக பக்க சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை தளர்த்துதல், வலுவான ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் மூலதன செலவினங்களை அதிகரிக்க நிதி இடம் கிடைப்பது ஆகியவற்றால் ஆதரிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

    மேலும், 2022-23ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக 2022-23 நிதியாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கியும் 7.5 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


    பொருளாதார நிதிநிலை அறிக்கையில், 2023-23ம் நிதியாண்டில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  தனியார் துறை முதலீடுகள் மூலம் பொருளாதாரம் மறுமலர்ச்சிபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Nirmala Seetharaman, Union Budget 2022

    அடுத்த செய்தி