முகப்பு /செய்தி /இந்தியா / தேர்தல்களில் தபால் வாக்கு முறைக்கு தடை விதிக்க வேண்டும்- சட்ட அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தேர்தல்களில் தபால் வாக்கு முறைக்கு தடை விதிக்க வேண்டும்- சட்ட அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தேர்தல் ஆணையம் புது முயற்சி

தேர்தல் ஆணையம் புது முயற்சி

தபால் வாக்கு முறையை ரத்துசெய்துவிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுவோர், சிறப்பு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தேர்தல்களில் தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், தபால் வாக்குகளை பதிவுசெய்யும்போது, அலுவலர்கள் மிரட்டப்படுவதாகவும், தேர்தலில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் கடந்த 16ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இதையும் வாசிக்க: பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்.. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டாவும் நியமணம்..

அதில், தபால் வாக்கு முறையை ரத்துசெய்துவிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுவோர், சிறப்பு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதியை வழங்க வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருந்தது. இருப்பினும், எனினும், 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட/ சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்ட (வீடுகள்/அரசு இடங்களில்) வாக்காளர்களுக்கு தபால் வாக்கை தேர்வு செய்யும் வசதி, இந்தத் தேர்தல்களில் வழங்கப்பட்டது.

First published:

Tags: Chief Election Commissioner, Election Commission