வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்! தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி கோரிக்கை

வாக்காளர்கள் தீர்ப்பில் முறைகேடுகள் நடைபெறலாம் என்று எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளால் நான் கவலையடைந்துள்ளேன்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்! தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி கோரிக்கை
முன்னாள் குடியரசு தலைவர்பிரணாப் முகர்ஜி
  • News18
  • Last Updated: May 21, 2019, 4:08 PM IST
  • Share this:
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுவரையில் இல்லாதவகையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெறலாம் என்று பிரதான எதிர்கட்சிகள் தீவிரமாக குற்றம்சாட்டிவருகின்றனர்.


இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ட்விட்டர் பதிவில், ’வாக்காளர்கள் தீர்ப்பில் முறைகேடுகள் நடைபெறலாம் என்று எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்களால் நான் கவலையடைந்துள்ளேன். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.



நம்முடைய ஜனநாயகத்தின் அடிப்படையை கேள்வி எழுப்பும் எந்த யூகத்துக்கும் நாம் இடம் தரக் கூடாது. மக்களின் தீர்ப்பு புனிதமானது. அது சிறிதளவு கூட சந்தேகத்துக்குள்ளாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசமைப்புகளின் நேர்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அவர்கள், கண்டிப்பாக செய்யவேண்டும். அனைத்து சந்தேகங்களையும் புறம்தள்ளவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:
First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading