ஹோம் /நியூஸ் /இந்தியா /

Gujarat Election: குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

Gujarat Election: குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

    குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, குஜராத்தில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

    முதல்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.  இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நேரடியாக தீவிர போட்டி இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், டெல்லியில் முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து தீவிரப்படுத்தி வருகிறது.எனவே, இம்முறை குஜராத்தில் தேர்தல் களம் மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Kannan V
    First published:

    Tags: Assembly Election 2022, Election Commission, Election commission of India, Gujarat