ஹோம் /நியூஸ் /இந்தியா /

உபி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

உபி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 14ம் தேதி கடைசி நாள் எனவும் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்காக கடைசி தேதி அக்டோபர் 17ம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகள்:

  வ. எண்மாநிலம்சட்டப்பேரவை தொகுதி
  1மகாராஷ்டிராஅந்தேரி கிழக்கு
  2பீகார்மோகமா, கோபால்கஞ்ச்
  3ஹரியானாஆதம்பூர்
  4தெலுங்கானாமுனுகோட்
  5உத்தரபிரதேசம்கோலா கோக்ராநாத்
  6ஒடிசாதாம்நகர்

  மேலும், இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தேர்தலுக்கான முடிவுகள் வரும் நவம்பர் 6-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க: முலாயம் சிங் யாதவிற்கு உடல் நலக்குறைவு.. அகிலேஷிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

  வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 14ம் தேதி கடைசி நாள் எனவும் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்காக கடைசி தேதி அக்டோபர் 17ம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Bihar, By election, Election commission of India, Maharashtra, Telangana, Uttar pradesh