இந்தியா v பாகிஸ்தான் என ட்வீட்... பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை...!

Delhi Election |

இந்தியா v பாகிஸ்தான் என ட்வீட்... பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை...!
கபில் மிஸ்ரா
  • News18
  • Last Updated: January 25, 2020, 3:24 PM IST
  • Share this:
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து பின்னர் நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, தற்போது பாஜக சார்பில் போட்டியிடும் நிலையில் அவர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின் பிரிந்து சென்ற கபில்மிஸ்ரா தற்போது பாஜக வேட்பாளராக டெல்லியில் போட்டியிடுகிறார்.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் (India Vs Pakistan) எனக் குறிப்பிட்டு டெல்லி தேர்தல் தேதியைக் குறிப்பிட்டிருந்தார்.


இவரது பதிவு மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.  இதையடுத்து அவரின் பதிவை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கும், கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கும் டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கபில் மிஸ்ரா பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேர தடை விதித்துள்ளது.
First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்