மோடியின் ’நானும் காவலன்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு: தூர்தர்ஷனுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி!

அரசு தொலைக்காட்சியை பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும்’ என்று கோரிக்கைவைத்தது.

news18
Updated: April 5, 2019, 10:59 AM IST
மோடியின் ’நானும் காவலன்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு: தூர்தர்ஷனுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி!
தூர்தர்ஷன்
news18
Updated: April 5, 2019, 10:59 AM IST
பிரதமர் மோடியின் ’நானும் காவலன்தான்’என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தொடர்பாக தூதர்சன் தொலைக்காட்சிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதன் மூலம் தூர்தர்ஷன் தொலைகாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

காங்கிரஸ் அளித்த புகாரில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் ’நானும் காவலன்தான்’(Main Bhi Chowkidar) என்ற நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதனுடைய யுட்யூப் சேனல், சமூக வலைதளங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சியை பா.ஜ.கவின் தேர்தல் பிரசாரத்தை விளம்பரப்படுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும்’ என்று கோரிக்கைவைத்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, ‘இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தூர்தர்ஷன் சேனலிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் எப்படி நேரம் ஒதுக்கியுள்ளீர்கள்? ஒரு கட்சிக்கென்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா? எப்படி இது செய்யப்பட்டது?’ என்று கேட்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Loading...

Also see:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...