வேலூரில் தேர்தல் ரத்து இல்லை - தேர்தல் ஆணையம் விளக்கம்

பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

news18
Updated: April 16, 2019, 9:51 AM IST
வேலூரில் தேர்தல் ரத்து இல்லை - தேர்தல் ஆணையம் விளக்கம்
பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
news18
Updated: April 16, 2019, 9:51 AM IST
வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மக்களவை தேர்தல் நாளை மறுநாள் தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

திமுக பொருளாளர் துரை முருகன் வீடு மற்றும் கல்லூரி ஆகிய இடங்களில் நடந்த ஐடி ரெய்டு மற்றும்  அவருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுபவரின் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களை கொண்டு தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக - பாஜக சார்பில் புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி சண்முகம் போட்டியிடுகிறார்.

படிக்க... “வந்தார்கள்... இல்லையென்றார்கள்... சென்றார்கள்...” ஐ.டி ரெய்டு குறித்து துரை முருகன் கருத்து

“தேமுதிகவை தொட்டவர்களின் வரலாறு இதுதான்” துரை முருகன் வீட்டில் ரெய்டு குறித்து பிரேமலதா கருத்து

Also See...

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...