Home /News /national /

மோடிக்கு எதிராக போட்டியிட்டவரின் வேட்புமனு தள்ளுபடி: தேர்தல் ஆணையம் விளக்கம்

மோடிக்கு எதிராக போட்டியிட்டவரின் வேட்புமனு தள்ளுபடி: தேர்தல் ஆணையம் விளக்கம்

தேஜ் பஹதூர்

தேஜ் பஹதூர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணிகளிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், லஞ்சம் வாங்கியது, பணி ஒழுங்கின்மை காரணமாக பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையத்திடமிருந்து சான்றிதழ் வாங்கவேண்டும்.

  • News18
  • Last Updated :
    பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தேஜ் பஹதூரின் விண்ணப்பத்தை அத்தொகுதியின் தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் ராணுவ வீரர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பஹ்தூர் நிறுத்தப்பட்டார். அவர், வேட்புமனு தாக்கல் செய்திருந்தநிலையில், அவருடைய வேட்புமனுவை நிராகரித்துள்ளதாக அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி சுரேந்தி சிங் அறிவித்தார்.

    இதுதொடர்பாக விளக்கமளித்த தேர்தல் அதிகாரி, ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணிகளிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், லஞ்சம் வாங்கியது, பணி ஒழுங்கின்மை காரணமாக பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையத்திடமிருந்து சான்றிதழ் வாங்கவேண்டும். அந்தச் சான்றிதழ் இன்று காலை 11 மணிக்கு முன்னதாக சமர்பிக்கப்படவில்லை. அதனால், அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தெரிவித்த தேஜ்பஹதூர், ‘என்னுடைய வேட்புமனு தவறான முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.15 மணி முன்னதாக ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்கள். எங்களால், அந்த நேரத்துக்குள் ஆவணங்கள் அளிக்க முடியாது. இன்று காலை 11 மணிக்கு ஆவணங்கள் அளித்துவிடுகிறோம் என்று கூறியிருந்தோம். அதேபோல, அவணங்களை அளித்தோம். இருந்தும் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்’ என்று தெரிவித்தார்.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Modi, Varanasi S24p77

    அடுத்த செய்தி