அதிருப்தி கருத்துகளை வெளியே கூற முடியாது: அசோக் லவாசாவின் கோரிக்கை நிராகரிப்பு

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அதிருப்தி கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

அதிருப்தி கருத்துகளை வெளியே கூற முடியாது: அசோக் லவாசாவின் கோரிக்கை நிராகரிப்பு
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா
  • News18
  • Last Updated: May 22, 2019, 11:55 AM IST
  • Share this:
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களில், அதிருப்தி கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறி, ஆணையர் அசோக் லவாசாவின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூன்று ஆணையர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில், தான் தெரிவித்த அதிருப்தி கருத்துகளை பதிவு செய்யவில்லை என அசோக் லவாசா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், மூன்று ஆணையர்களில் ஒருவர் மட்டுமே அதிருப்தி கருத்து தெரிவித்திருந்தாலும், அதனை முறையாக ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என விளக்கமளித்தது.

அதேநேரத்தில், அதிருப்தி கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்றும் கூறிய தேர்தல் ஆணையம், அசோக் லவாசாவின் கோரிக்கையையும் நிராகரித்தது.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அதிருப்தி கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

Loading...

இதனையடுத்து, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, இதுதொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also see...

First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...