நிசாமாபாத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பிய தேர்தல் ஆணையம்!

தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் தொகுதியில் 189 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

news18
Updated: March 28, 2019, 8:42 PM IST
நிசாமாபாத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பிய தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையம்
news18
Updated: March 28, 2019, 8:42 PM IST
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் தொகுதியில் 189 பேரின் வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியில் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் ஒரே கட்டமாக முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் தொகுதியில் 189 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அம்மாநில விவசாயிகள் அவர்களது அவலநிலையை வெளிப்படுத்தும் விதமாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடும் நிசாமாபாத் தொகுதியில், அவருக்கு எதிராக அதிகமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதனால், அந்தத் தொகுதியில் மட்டும் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜட் குமார், ‘மின்னணு வாக்கு இயந்திரத்தில் 63 வேட்பாளர்கள் மற்றும் கூடுதலாக நோட்டோ மட்டுமே இடம் பெற முடியும். வேட்புமனுவை திரும்பப் பெறும் தேதி நிறைவடைந்த பிறகுதான் எத்தனைப் பேர் போட்டியிடுகிறார்கள் என்பது உறுதியாகும். எனவே, அதற்காக காத்திருக்கிறோம். 189 பேர் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. எனவே, பெரிய அளவிலான வாக்குச் சீட்டு ஏற்பாடு செய்யவுள்ளோம். மற்ற மாவட்டங்களிலுள்ள பெரிய வாக்குப் பெட்டியின் கையிருப்பு குறித்து சோதனை செய்துவருகிறோம்’ என்று தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 503 பேரின் வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளன. 143 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிசாமாபாத் தொகுதியிலிருந்து மட்டும் 14 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Also see:

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...